Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 4 மாதங்களாக போர் மேகங்கள் சூழ்ந்துள்ள யேமெனில் மிகப் பெரும் பஞ்சம் ஏற்படும் அபாயம் தோன்றியிருப்பதாக ஐ.நா இன் உலக உணவுத் திட்டமான WFP எச்சரித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறை, சுத்தமான குடிநீர் இன்மை மற்றும் குறைந்து வரும் எரிபொருள் சேமிப்புக்கள் என்பன யேமெனி மக்களை மிகப் பெரும் அவல நிலைக்குத் தள்ளி வருவதாக WFP இன் இயக்குனர் எர்த்தரின் கௌசின் தெரிவித்துள்ளார்.

யேமேனில் தற்போது 13 மில்லியன் மக்களுக்கு உணவு, குடிநீர் போன்ற உடனடி அத்தியாவசியப் பொருட்கள் விரைவில் தேவைப் படுவதாகவும் WFP கணித்துள்ளது. கடந்த 4 மாதங்களாக யேமெனில் ஹௌத்தி கிளர்ச்ச்சியாளர்களுக்கும் சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகளின் உதவியுடன் செயற்படும் யேமெனி அரசு சார்புப் படைகளுக்கும் இடையே போர் நடந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக யேமெனில் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்த கௌசின் அதன் பின்னரே மேற் குறித்த தகவல்களை அளித்துள்ளார். அவரின் புள்ளி விபரப் படி தற்போது யேமெனின் சனத்தொகையில் 80% வீதமானவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதுடன் 13 மில்லியன் மக்களுக்கு உணவுப் பற்றாக்குறையும் நிலவுகின்றது. மேலும் 1.4 மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதுடன் 2000 பேர் வரை பலியாகியும் உள்ளனர்.

மேலும் கௌசினின் கூற்றுப் படி மீள நிரப்ப முடியாத படி யேமெனில் ஏற்பட்டுள்ள இழப்புக்களால் 1.2 மில்லியன் மக்கள் போசாக்கின்மையால் பாதிக்கப் படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதனால் அங்கு கடும் பஞ்சம் ஏற்படுவதற்கு இன்னும் ஒரு படியே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைவிட யேமென் போரில் இதுவரை 400 சிறுவர்களும் கொல்லப் பட்டுள்ளனர்.

0 Responses to யுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ள யேமெனில் பாரிய பஞ்சம் ஏற்படும் அபாயம்!:ஐ.நா எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com