இன்று பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 48 பேர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் சந்தித்தனர்.
என்எல்சி தொழிலாளர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஒப்பந்தத் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், என் எல் சியில் மின் உற்பத்திக் குறைந்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்று ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் அந்தக் கடிதத்தில், நிலக்கரித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி என் எல் சி ஊழியர்களின் கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றி, சுமுக உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும், ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மற்றும் நிலக்கரித் துறை செயலரை சந்தித்து ஜெயலலிதாவின் கோரிக்கைகளை முன் வைத்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர் அதிமுக எம்பிக்கள்