ஜப்பானின் தெற்கே அமைந்துள்ள ககோஷிமா நகரில் அமைந்துள்ள சக்குரஜிமா என்ற உயிர் எரிமலை எந்நேரமும் வெடித்துச் சிதறலாம் என்ற அபாயம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அப்பகுதியில் வசித்து வரும் ஆயிரக் கணக்கான மக்களை பாதுகாப்பான பிரதேசங்களுக்கு உடனே இடம்பெயருமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுமார் 600 000 மக்களைக் கொண்டுள்ள ககோஷிமா நகரில் சக்குரஜிமா எரிமலை வெடிப்பு அபாயத்தினால் அங்கு 2 ஆவது அதிகபட்ச மட்ட எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
ஃபுக்குஷிமா சுனாமி அனர்த்தத்தின் பின் கடந்த 4 வருடங்களாக ஜப்பானில் மூடப் பட்டிருந்த அணு உலைகளில் சில மின்சாரத் தேவைக்காகத் திறக்க பட்டிருந்தன. இந்நிலையில் வெடித்துச் சிதறும் அபாயத்திலுள்ள சக்குரஜிமா எரிமலைக்கு அண்மையில் 50 Km தொலைவில் இவ்வாறு திறக்கப் பட்ட அணு உலைகளில் ஒன்று அமைந்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. சுமார் 1117 மீட்டர் உயரம் கொண்ட சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வரும் இடங்களில் ஒன்றான சக்குரஜிமா எரிமலை இதற்கு முன்னர் கடந்த 2013 இல் வெடித்துச் சிதறியிருந்தது. அதன் போது பொதுமக்கள் வசித்து வந்த பகுதிகளில் எரிமலை சாம்பலும் வெடித்துச் சிதறிய கற்களும் வந்து வீழ்ந்திருந்தன. ஆனால பலத்த சேதம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.
பசுபிக் சமுத்திரத்தின் ரிங் ஆஃப் ஃபைர் என அழைக்கப் படும் நெருப்பு வளையப் பகுதிக்குள் அமைந்துள்ள ஜப்பானில் பல உயிர் எரிமலைகள் காணப் படுகின்றன. ஜூன் மாதம் ஜப்பானின் மத்திய நகனோ கட்டமைப்புக்கு அண்மையிலுள்ள ஒன்டாக்கே என்ற எரிமலை வெடித்துச் சிதறியதில் அண்மையில் வசித்து வந்த 63 பொதுமக்கள் கொல்லப் பட்டும் 6 மலையேறு வீரர்கள் காணாமற் போயும் இருந்தனர். கடந்த 90 வருடங்களில் ஜப்பானில் இடம்பெற்ற மோசமான எரிமலை வெடிப்பு அது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜப்பானின் சக்குரஜிமா எரிமலை வெடித்துச் சிதறும் வாய்ப்பு மிக அதிகம் என அறிவிப்பு!