இன்று சனிக்கிழமை 2 ஆம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் சரணடைந்தது மற்றும் யுத்தம் முடிவுக்கு வந்ததன் 70 ஆவது ஆண்டைக் குறிக்கும் நிகழ்வுகள் ஜப்பானிலும் நியூயோர்க்கிலும் அரங்கேறியுள்ளன.
இதன் போது வழமையாக ஒவ்வொரு வருடமும் நிகழ்வதைப் போல் இம்முறையும் 2 ஆம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் மோசமாக நடந்து கொண்டதற்காக பிரதமர் சின்ஷோ அபே பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார்.
2 ஆம் உலகப் போர் சமயத்தில் ஜப்பானின் ஆக்கிரமிப்பின் கீழ் சீனாவும், தென் கொரியாவும் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்தன. இது போன்ற காரணங்களுக்காகவும் அப்பாவி மக்களுக்கு இளைத்த இன்னல்களுக்காகவும் தாம் மிகவும் வருந்துவதாகத் தெரிவித்திருந்த பிரதமர் சின்ஷோ அபே ஆனாலும் தனது நாட்டின் எதிர்காலச் சந்ததிக்கு இந்த யுத்தத்தோடு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இனி வரும் காலத்தில் அவர்கள் மன்னிப்புக் கோரத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டதால் சீனா, தென்கொரியா உட்பட உலக நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. குறிப்பாக யுத்த சமயத்தில் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கி இழைத்த துன்பம் குறித்து எதுவும் வாய் திறவாத அபே வருத்தம் தெரிவித்த போதும் முன்னைய ஜப்பான் தலைவர்களைப் போன்று மன்னிப்புக் கோரவில்லை என அந்நாடுகள் சுட்டிக் காட்டியுள்ளன.
சமீபத்தில் தான் ஜப்பான் படைகள் வெளிநாட்டில் போரிட வழிவகுக்கும் விதத்தில் அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த பாராளுமன்றத்தின் மக்களவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில் பொது மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அபே இத்திருத்தத்தை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்று சனிக்கிழமை ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது போன்று 2 உலகப் போர் முடிவைக் கொண்டாடும் முத்தத் திருவிழா நியூயோர்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது நூற்றுக் கணக்கான அமெரிக்க ஜோடிகள் ஒன்று கூடி தொடர்ந்து பல நிமிடங்களுக்கு ஒருவரை ஒருவர் முத்தமிட்டுத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அமெரிக்கா அடுத்தடுத்து இரு அணுகுண்டுகளை ஜப்பான் மீது போட்டதை அடுத்து ஏற்பட்ட பேரழிவின் தாக்கத்தால் ஜப்பான் உடனே சரணடைந்ததுடன் அணுவாயுதத்தின் ஆற்றல் குறித்த பயத்தினால் ஏனைய நாடுகளும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்பியதை அடுத்து 70 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினமான ஆகஸ்ட் 15 இல் பல இலட்சம் உயிர்களைக் குடித்த 2 ஆம் உலக யுத்தம் முடிவுக்கு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 2 ஆம் உலகப் போர் நிறைவு தினம்:ஜப்பான் மன்னிப்பு!: நியூயோர்க்கில் முத்தக் கொண்டாட்டம்