Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113 ஆசனங்களை பெற்று வெற்றி பெறுமாயின் கட்சியில் நீண்டகாலமாக அங்கம் வகிக்கும் சிரேஷ்ட நபர் ஒருவருக்கே பிரதமர் பதவியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இதேவேளை, கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை வழங்குவதில் தனக்கு அதிகாரம் உள்ளது எனவும் ஜனாதிபதி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.ம.சு.கூ வென்றாலும் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி இல்லை!: ஜனாதிபதி மைத்திரி மீண்டும் தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com