Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் கொலையாளிகள் என கூறப்படுபவர்களை விடுதலை செய்ய எடுத்த முடிவில் சட்ட விதிமீறல்கள் இல்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று கருதப்படும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசு எடுத்திருந்தது. இதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்து இருக்கும் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மத்திய அரசு, தமிழக அரசு ஆகிய இரண்டு அரசுகளும் எழுத்துப் பூர்வமாக அறிக்கை அளிக்க வேண்டும், அந்த அறிக்கையை இன்று தமிழக அரசு அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் ராஜீவ் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவில் எந்தவித சட்ட விதி மீறல்களும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை வழங்குவது என்பது சட்டத்தில் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் எடுத்த முடிவை நீதிமன்றம் மாற்ற அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to ராஜீவ் கொலையாளிகள் என கூறப்படுபவர்களை விடுதலை செய்ய எடுத்த முடிவில் சட்ட விதிமீறல்கள் இல்லை : தமிழக அரசு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com