Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமையும் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்காது என்று அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியத் தொலைக்காட்சியொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது என்பது அரசாங்கத்தின் கூட்டுப் பொறுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்காளியாக்கும். அது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் பேச்சுக்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க விடாமல் செய்யும். அப்படியான நிலையில், அமைச்சுப் பதவிகளைப் ஏற்க முடியாது. எமக்கு பதவிகளை விட மக்களின் உரிமைகளைப் பெறுவதே பிரதானமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to த.தே.கூ அமைச்சுப் பதவிகளை ஏற்காது; இனப்பிரச்சினைக்கான தீர்வே பிரதான இலக்கு: எம்.ஏ.சுமந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com