Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கமொன்று அமையுமென்றும், அந்த அரசாங்கத்தில் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிப்பார் என்றும் பிரபல சோதிடர் உபுல் எஸ் தொம்பேபொல தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானாலும், அந்தப் பதவியில் தொடராமல் அரசியலில் இருந்தே விலகுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரப் போகும் பாராளுமன்ற பதவிக் காலத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தலைவர் ஒருவர் உருவாகுவார் என்றும், சிறிய கட்சிகளிலில் இருந்து தேசிய தலைவர் ஒருவர் உருவாகுவார் என்றும் உபுல் எஸ் தொம்பேபொல மேலும் கூறியுள்ளார்.

0 Responses to புதிய பிரதமர் ரணில்; மஹிந்த அரசியலில் இருந்து விலகுவார்: பிரபல சோதிடர் ஆருடம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com