Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்மூலம், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினாலேயே, தேசிய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சி அங்கம் வகிப்பதற்கான அனுமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, சரத் அமுனுகம மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் அடங்கிய சுதந்திரக் கட்சியின் இன்றைய (வியாழக்கிழமை) மத்திய குழுவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கினார்.

0 Responses to தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கு சுதந்திரக் கட்சி மத்தியகுழு அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com