Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் இரு வருடங்களுக்காவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான அரசாங்கத்தை அமைக்க, ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியது.

ஜனாதிபதி கட்சி தலைவராக மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களுக்கும் மத்திய செயற்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய அரசாங்கத்திற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் அதற்காக 06 பேர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அடுத்து வரும் இரு வருடங்களுக்கு மைத்திரி தலமையிலான அரசாங்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com