Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுமந்திரனின் வெற்றிக்காக அமெரிக்க தூதுவராலயமும் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளது. யாழிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்கா தூதுவராலய அதிகாரிகள் குழுவொன்று இது தொடர்பில் பலதரப்புக்களினையும் அழைத்து தகவல்களை பெற்றுவருகின்றது.

சுமந்திரனிற்கான வெற்றி வாய்ப்பு எவ்வாறிருக்கின்றது? மக்கள் ஏன சுமந்திரனிற்கு ஆதரவளிக்க மறுக்கிறார்கள்? போன்ற பல கேள்விகளை எழுப்பிவருவதுடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பான சனல் 4 செய்தியினையும் நிராகரித்தும் வருகின்றனர்.

முன்னதாக தமது கட்சி சார்ந்த விஜயகலா வெல்கின்றாரோ இல்லையோ சுமந்திரன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் வரவேண்டுமென ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டிருந்தார்.அத்துடன் இந்திய தூதுவராலயமும் சுமந்திரனின் வெற்றிக்கு பாடுபட்டுவருகின்றது.

போர்குற்ற விசாரணையை முடக்குவது உள்ளிட்ட பல விடயங்களினில் சுமந்திரனின் வெற்றி இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு தேவையாக உள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to சுமந்திரனின் வெற்றிக்காக பாடுபடும் - ரணில், அமெரிக்கா, இந்தியா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com