ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமற்போதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் வழங்கியுள்ள வாக்கு மூலங்களிலிருந்து பல புதிய திருப்புமுனைகள் இரகசியப் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்படி இராணுவ அதிகாரி பிரகீத் எக்னலிகொடவின் கடத்தலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநாகலில் வைத்து பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தான் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கிரித்தல முகாமில் வைத்து விசாரணைக்குட்படுத்தியதனை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவரென்ற வகையில் குடும்ப மரம் (பவுல் கஹ) என்னும் வெளியீடு குறித்தும் அப்போதைய எதிர்க்கட்சி பொது வேட்பாளரான முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடனான தொடர்பு குறித்தும் தான் எக்னலிகொடவை விசாரணைக்குட்படுத்தியதாகவும் அவர் இரகசியப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது விசாரணையை தொடர்ந்து கிரித்தல முகாமிலுள்ள சிரேஸ்ட இராணுவ அதிகாரி ஒருவர் (மேஜர்), ஊடகவியலாளருக்கு எங்கோ செல்ல வேண்டியிருப்பதாகக் கூறி (கமனக் யன்ன தியனவா) அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் எக்னலிகொடவுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து எனக்கு தெரியாது. அதனைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பின்னரே எக்னலிகொட இராஜகிரியவில் வைத்து கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவ்வதிகாரி இராகசியப் பொலிஸாரின் விசாரணைகளின் போது குறிப்பிட்டுள்ளார்.
எக்னலிகொட 2010 ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே காணமாற் போனார். இராணுவ அதிகாரி வழங்கிய வாக்கு மூலத்திற்கமைய கிரித்தல இராணுவ முகாமைச் சேர்ந்த கேணல் ஒருவரும் எக்னலிகொட குறித்து அறிந்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இதற்கமைய, மேற்படி இரண்டு இராணுவ அதிகாரிகளையும் கைது செய்வதற்காக பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் 2010 ஆம் ஆண்டு கடத்தல் தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் இரகசியப் பொலிஸார் முன்னாள் புலி உறுப்பினர்களை இருவரை கைது செய்திருந்தனர்.

0 Responses to ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தலுடன் இராணுவத்துக்கு தொடர்பு?