Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் 15வது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

கடந்த பொதுத் தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க தலைமையில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.

இரண்டாவது பெரிய கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதால், மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக வருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதனையடுத்து, இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவராகிறார் சம்பந்தன்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com