புதிய அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கைகளை ஏற்று இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
“தற்போது ஐக்கிய தேசிய முன்னணியிடம் 106 ஆசனங்கள் உள்ளன. முதற்கட்டமாக நல்லாட்சிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட 20 பேர் எம்முடன் இணையவுள்ளனர். மேலும் பலரும் வரவுள்ளனர். அதனுடன் நாம் அரசாங்கம் அமைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, “எமக்கு 106 ஆசனங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் சுமார் 20 பேர் எம்முடன் இணையவுள்ளனர். அத்துடன் நல்லாட்சிக் கான கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள பலர் எம்முடன் இணைவர் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கமைய நாம் அனைவரும் இணைந்து சிறந்த நாடு ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும். அனைத்து மக்களும் சுதந்திரமும் மகிழ்ச்சியுமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே எமது எதிர்கால இலக்கு.
அவசரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் என்னம் இல்லை. அவ்வாறு பேச்சு நடத்தினால் அது வேறு பல விமர்சனங்களைத் தோற்றுவிக்கும் சிலவேளை நாம் நாட்டைப் பிரிக்கப் போகிறோம் என்றும் விமர்சிக்க இடமுண்டு உண்மையில் நாம் அவ்வாறு நாட்டைப் பிரிப்பவர்கள் இல்லை. அவர்கள் எம்முடன் நட்புறவுடன் இணைந்து செயல்படுபவர்கள்.
தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சில அடிப்படைவாதிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். தோல்வி கண்ட பின்பும் இது போன்ற விமர்சனங்களை முன்னெடுப்பதே அவர்களின் நோக்கம்.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனவரி 8ம் திகதி ஆரம்பித்த நல்லாட்சிக்கான பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டன. அதற்கான செயற்பாடுகள் தொடரும்.” என்றுள்ளார்.

0 Responses to த.தே.கூ புதிய அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட முன்வரும்: ரவி கருணாநாயக்க