சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அர்ப்பணிப்பாக உழைக்குமானால்; அதற்கு ஆதரவளிக்கவும், இணைந்து செயற்படவும் தயார் என்று தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளதாவது, ”நடந்து முடிந்த பொதுத் தேர்லில் எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எமக்கு எதிராக எத்தனையோ பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் பலத்த சவாலின் மத்தியில் இந்த தேர்தலில் நாம் போட்டியிட்டோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தேர்தல் காலத்தில் கூறும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி எதனையும் செய்யவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஆனாலும் கூட தேர்தல் முடிவடைந்த பின்னர் நடைபெறவுள்ள செயற்பாடுகளின் அடிப்படையிலேயே எது தொடர்பாகவும் முடிவுக்கு வர முடியும்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எமக்கு பெரும் ஆதரவை வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய நிதியுதவியின் மூலம் தான் நாம் மனிதாபிமான உதவிகளை செய்து வந்துள்ளோம். அவர்களுடைய உதவியும் ஆதரவும் தொடர்ந்தும் எமக்கு இருக்க வேண்டும். தமிழ் தேசம் என்பது வெறும் உள்ளூரில் உள்ளவர்களை மட்டும் கொண்டது அல்ல. இது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியதாகும்.
தமிழ் தேசியவாதம்தான் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கின்றது. தமிழ் தேசியம் என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம். எந்தவோரு சந்தர்ப்பத்திலும் வேறு இனத்தவர்களின் அடையாளத்தை அழிக்கவோ அன்றி சிதைக்கவோ நாம் முயலவில்லை. அதனைப்போல எமது தேசியத்தையும் கலாசாரத்தையும் யாரும் அழிக்கவோ சிதைக்கவோ அனுமதிக்கவும் முடியாது. நாம் என்றும் எமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to த.தே.கூ.வுடன் இணைந்து செயற்படத் தயார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்