பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பிலான விசாரணைகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தியுள்ளார்.
கட்சியின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை தேர்தல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து உரையாடும் போதே அவர் மேற்கண்ட அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
வசீம் தாஜூதீனின் மரணம் கொலையின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், அவரின் ஊடலம் நேற்று தோண்டியெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த விடயத்தை சிலர் தவறாக அரசியல் நோக்கங்களுக்காக கையாள நினைப்பதாகவும், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது: மஹிந்த தேசப்பிரிய