Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைக்காக நாம் கடந்த காலங்களில் முன்னெடுத்த போராட்டங்களும், அதற்கான எமது தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் வீண் போகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தபோதுதான், அதற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரைக்கும் ஆதரவாக இருந்தது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளுக்கும் நாம் ஆதரவு வழங்கினோம். அவர்களை உயர்வாக மதித்தோம். எனவே, முன்னாள் போராளிகள் எமக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கை இராணுவமயமாக்க முயன்ற மஹிந்தவை நமது கட்டுக்கோப்பான ஒற்றுமையால் - வாக்குரிமை என்ற ஆயுதத்தால் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி விரட்டினோம். அதேபோன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நமது உணர்வுகளையும் ஒற்றுமையையும் சரியான முறையில் பயன்படுத்தி எமது பேரம் பேசும் சக்தியை உலகுக்கு உணர்த்தவேண்டும். நமது போராட்டங்களும் தியாகங்களும் வீண் போகக்கூடாது என்று மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to எமது தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் வீண் போகக் கூடாது: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com