ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த பின்னர் தனி ஈழக் கோரிக்கையை யாரும் முன்வைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “சர்வதேச சமூகத்தினால் தமிழ் மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்க்கப்படுகின்றது. வேறு எந்த தமிழ் கட்சிகளையும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவைக்க விரும்பவில்லை. எமது உடனடி தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய அவர் விரும்பவில்லை. அவருடன் பல தடவைகள் நாங்கள் பேசியிருக்கிறோம்.
இந்த பேச்சுக்களின்போது மஹிந்த எங்களை ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டாரே தவிர தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கும், தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் எந்த நோக்கமும் அவருக்கு இருக்கவில்லை.” என்றுள்ளார்.




0 Responses to ஆயுதப் போராட்டத்தின் முடிவிற்குப் பின்னர் யாரும் பிரிவினையைக் கோரவில்லை: சம்பந்தன்