ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தன்னால் நேரடி விவாதமொன்றுக்கு செல்ல முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார். குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிரதமர் வேட்பாளர் என்று யாரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் முன்மொழியவில்லை. அப்படியிருக்க, சாதாரண வேட்பாளர் ஒருவருடன் விவாதிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளரும், தற்போதைய பிரதமருமான ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.ம.சு.கூ.வின் சாதாரண வேட்பாளரான மஹிந்தவுடன் நேரடி விவாதத்துக்கு செல்ல முடியாது: ரணில்