Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமராகும் வாய்ப்பு தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கே அதிகமிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் உணர்வு மற்றும் அவர்களின் மனப்பாங்கு தொடர்பில் முக்கிய கேள்விகளை கொண்டு நாடளாவிய ரீதியில் மாற்றுக்கொள்கை நிலையத்தினால் குறித்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, இலங்கையின் அடுத்த பிரதமராகுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு 39.8 வீத மக்கள் ஆதரவு இருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 27.5 வீத மக்கள் ஆதரவு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

4 வீதமானோர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறாது எனவும் 66.9 வீதமானோர் நீதியான தேர்தல் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பிரதமராவதற்கு யார் மிகவும் பொருத்தமானவர்? என்ற கேள்விக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் 62.3 வீதமும், மலையக தமிழ் மக்கள் 71.2 வீதமும், முஸ்லிம் மக்கள் 62.3 வீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சமூகத்தினரின் 2 வீதமானோர் மாத்திரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிங்கள மக்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 36 சதவீதமானோர் மஹிந்த ராஜபக்ஷவே பிரதருக்கு தகுதியானவர் எனவும், 31.9 வீதமானோர் ரணில் விக்ரமசிங்கவே தகுதியானவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மாகாண அடிப்படையில் மேல், மத்திய, வடக்கு, கிழக்கு, வட மேல், ஊவா மற்றும் சப்பரகமுவ மாகாணங்களில் ரணில் விக்ரமசிங்கவுக்கே அதிகமான ஆதரவு உள்ளது. தெற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மஹிந்த ராஜபக்வுக்கு கூடுதலான ஆதரவு உள்ளது. அத்தோடு, நாட்டில் 58.1 வீதமானோர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போவது என ஏற்கனவே தீரமானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய கருத்துக் கணிப்பில் தற்போதைய மைத்திரிபால சிறிசேனவுக்கு 76 வீதமானோரும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு 23.94 வீதமானோரும் வெற்றி பெறுவார்கள் அறிவிருத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Responses to அடுத்த பிரதமர் யார்?; கருத்துக் கணிப்பில் ரணில் 39.8% மக்கள் ஆதரவோடு முன்னிலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com