ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உருவாகும் புதிய அரசாங்கம் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய அரசாங்கம் முன்னெடுக்கும் முன்னோக்கிய செயற்திட்டங்களுக்கு தமிழ்த் தெசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "ஜனவரி 08ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்காகவும், நல்லாட்சிக்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆணை வழங்கினர். அதனைத் தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு ஒப்பான நல்லாட்சியை மகிமைப்படுத்த கடந்த 17ஆம் திகதியும் பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
இந்த ஆணைக்கேற்ப ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தையும் வரவேற்கின்றோம். இந்தத் தேசிய அரசாங்கம் நாட்டிலுள்ள இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: சம்பந்தன்