தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய மூன்று பிரதான கட்சிகளும் வெளியிட்டுள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் மொத்தமுள்ள 29 தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 12 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கப்பட்டன.
இதன்பிரகாரம், தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை பிரதான கட்சிகள் வெளியிட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்திற்கு போதிய இடம் வழங்கவில்லை என்கிற குற்றஞ்சாட்டு பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் 7 பேர் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஐ.தே.க உறுப்பினர்கள்: கரு ஜெயசூரிய, டி.எம்.சுவாமிநாதன், மலிக் சமரவிக்ரம, அத்துரலியே ரத்தன தேரர் (ஹெல உறுமய), ஜெயம்பதி விக்ரமரத்ன, திலக்க மாரப்பனே, சீ.ஏ.மாரசிங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, எம்.எச்.எம்.நவவி (அ.இ.ம.கா -தேர்தலில் தோல்வி), எம்.எஸ்.சல்மான் (மு.கா), ஏ.ஆர்.ஏ. ஹபீஷ் (மு.கா.), அனோமா கமகே, சுரேன் டி மெல்
ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள்: சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா (தேர்தலில் தோல்வி), எஸ்.பி.திசாநாயக்க (தேர்தலில் தோல்வி), மஹிந்த சமரசிங்க (தேர்தலில் தோல்வி), லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (தேர்தலில் தோல்வி), திலங்க சுமதிபால (தேர்தலில் தோல்வி), அங்கஜன் இராமநாதன் (தேர்தலில் தோல்வி), எம்.ஹிஸ்புல்லாஹ் (தேர்தலில் தோல்வி), மலிக் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி
ஜே.வி.பி உறுப்பினர்கள்: சுனில் ஹந்துன் நெத்தி (தேர்தலில் தோல்வி), சரத் சந்திர மாயாதுன்ன

0 Responses to பிரதான கட்சிகளின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்!