Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகம் முழுவதும் தினம் தினம் கலவாரம் நடந்துக்கொண்டு இருக்கும் நிலையில், பதில் அளித்துள்ள இ.வி.கே.எஸ்.இளங்கோவன், நான் ஜெயலலிதா, சோபன் பாபு பற்றிப் பேசினேனா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது இல்லத்தில் விருந்து வைத்து உபசரித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதுக்குறித்து இளங்கோவன் கொச்சையான கருத்துக்களை வெளியிட்டார் என்று கடந்த 3 நாட்களாக சென்னையில் அதிமுக,பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.சென்னையில் போராட்டத்தில் கலந்துக் கொண்ட, தமிழிசை சவுந்திரராஜன், இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்துக்கு கடுமையான எதிர்க் கருத்துக்களைப் பதிவு செய்தார்.குஷ்பூ, சோனியா காந்தியைக் குறித்தும் இவர் கருத்துக்களைக் கூற மறக்கவில்லை.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் இன்று இ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது செய்தியாளர்கள் ஏடாகூடமாகக் கேள்வி எழுப்பியதாகத் தெரிய வருகிறது.இதையடுத்து அங்கு சிறிது நேரம் இதனால் சலசலப்பு நிலவியது. அடுத்து செய்தியாளர்களிடம் சுமுகமாகப் பேசிய இளங்கோவன், நான் இரு கட்சிகளின் உறவுக் குறித்துத்தான் விமர்சித்தேன், ஜெயலலிதா முன்பு எப்படி இருந்தார் என்பதுக் குறித்துப் பேசினேனா? அல்லது ஜெயலலிதா சோபன் பாபுவுடன் வாழ்ந்ததுக் குறித்து அவதூறாகப் பேசினேனா? கேவலமாக ஜெயா டிவியில் சித்தரித்து செய்திகள் வெளியிடுகிறார்கள்..இவர்கள் சோனியாகாந்தியைப் பற்றி பேசியது தெரியாதா? என்று பல கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பியுள்ளார்.

0 Responses to நான் ஜெயலலிதா சோபன் பாபு பற்றிப் பேசினேனா?:இ.வி.கே.எஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com