வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என்று மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என்று அந்தக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எம்மில் நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றமைக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம். அவர்களின் நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனினும், வடக்கு- கிழக்கில் இன்னும் சில ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டிருக்கலாம். ஆனால், சில விசம சக்திகளின் செயற்பாடுகளினால் அது தடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை வென்று பாராளுமன்றத்துக்குள் மூன்றாவது பெரிய சக்தியாக வந்துள்ளது. அது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் பிரதிநிதிகள் த.தே.கூ என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது: சம்பந்தன்