Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரலாற்றுப் பாடங்களை அனுபவமாகக் கொண்டு ஜனநாயகத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றுவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனித்து அன்றி சர்வதேச நாடுகளின் இணக்கப்பாடுகள், உடன்படிக்கைகள், ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய, சார்க் அமைப்புகளின் ஒத்துழைப்புடனேயே சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்து விடயங்களிலும் புரிந்துணர்வு, இணக்கப்பாடு, சகோதரத்துவத்துடன் செயற்படுவது அவசியமாகிறது என்றும் கூறியுள்ளார்.

அனைத்துச் சவால்களையும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு உலகின் சிறந்த நாடாக இங்கையைக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கான கற்கை பீடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வரலாற்றினை பாடமாகக் கொண்டு நல்லிணக்கத்தை அடைவதே அரசாங்கத்தின் இலக்கு: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com