திங்கட்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் எரவான் எனப்படும் இந்துக் கோயில் வளாகத்தில் நிகழ்த்தப் பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 9 வெளிநாட்டினர் உட்பட 27 பேர் பலியாகியும் நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் இருந்தனர்.
இக்கோயிலில் குண்டு வைத்தவராகக் கருதப் படும் ஓர் இளைஞரின் உருவம் அங்கிருந்த கண்காணிப்பு கமெராக்களில் சிக்கியிருந்தது. இதையடுத்து தீவிர விசாரணையை முடுக்கியிருந்த தாய்லாந்து போலிசார் இன்று வியாழக்கிழமை குறித்த குண்டு வெடிப்புத் தாக்குதலின் பின்னணியில் 10 பேர் அடங்கிய மிகப் பெரிய வலையமைப்பு உள்ளதாகவும் இவர்களின் பின்னால் சர்வதேச தீவிரவாதக் குழுக்கள் செயற்பட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் கண்காணிப்புக் கமெராக்களில் சிக்கியிருந்த முக்கிய குற்றவாளியாகக் கருதப் படும் மர்ம நபர் ஓர் வெளிநாட்டவராக இருக்கலாம் எனவும் தற்சமயம் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் போலிசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் குறித்த மர்ம நபரின் கணனி உருவப் படத்தை பத்திரிகை முதலான ஊடகங்களில் வெளியிட்டுள்ள தாய்லாந்து போலிசார் அவரைப் பற்றித் துப்புக் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் பாஹ்த் தாய்லாந்து பணம் பரிசளிக்கப் படும் எனவும் அறிவித்துள்ளனர். மறுபுறம் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் யூச்சா கூறுகையில் குறித்த மர்ம நபர் தாய்லாந்துக்குள் இருக்கும் பட்சத்தில் அவர் போலிசாரிடம் மாட்டிக் கொல்லக் கூடாது என்பதற்காக கொல்லப் பட வாய்ப்பிருப்பதால் அக்குற்றவாளி உடனே சரணடைய அவருக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில தசாப்தங்களில் தாய்லாந்தை உலுக்கிய மாபெரும் குண்டுத் தாக்குதலான இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிப்பதற்குத் தாய்லாந்து அரசு உள்நாட்டு இன்டெர்போல் மற்றும் வெளிநாட்டு புலனாய்வு ஏஜன்ஸிக்களுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது. மேலும் கண்காணிப்புக் கமெராவில் சிக்கியிருந்த இளைஞரை எரவான் கோயிலுக்குக் கூட்டி வந்த மோட்டார் சைக்கிள் டேக்ஸி டிரைவர் அளித்த தகவலில் அந்நபர் ஓர் தாய்லாந்து நாட்டவர் போல் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இக்குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் இதை நிகழ்த்தியவர்கள் எவராக இருப்பினும் அவர்களின் பிரதான நோக்கம் தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்தையும், சுற்றுலாத் துறையையும் சீர் குலைப்பது தான் எனத் தாய்லாந்து அதிகாரிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தாய்லாந்து இந்துக் கோயில் குண்டு வெடிப்புக்குப் பின்னால் மிகப் பெரிய வலையமைப்பு