கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் நிதி மோடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 10 திகதி ஆஜராகுமாறு கொழும்பு வர்த்தக உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி 142 மில்லியன் ரூபாவை செலுத்தாது முறைகேடு செய்திருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரட்ன இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா, தேர்தல் குழு உறுப்பினர் காமினி செனரத் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 2015 ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கான செயற்குழு உறுப்பினர்கள் ஏழுபேருக்கே அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 08ம் திகதி நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்காக இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து பஸ்களை வாடகைக்கு அமர்த்தியிருந்தபோதும், அதற்கான பணத்தை செலுத்தத் தவறியிருப்பதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மோசடி; மஹிந் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!