தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு பூராவுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 8வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது.
நேற்று சனிக்கிழமை மாலை வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 35 பேர் மயக்கமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்ட வாக்குறுதி கடந்த 07 ஆம் திகதி வரை நிறைவேற்றப்படாததையடுத்து, மறுநாள் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 8வது நாளாகவும் தொடர்கிறது; 35 பேர் மயக்கம்!