Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மிகக் கொடூரமான தீவிரவாதி ஒருவர் மறைந்திருப்பதை அடுத்து, ஃபாரீஸ் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் ஃபாரீஸ் நாட்டில் மிகக் கொடுமையானத் தாக்குதல்களை நிகழ்த்தினர். இதுக்குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெல்ஜியத்திலிருந்து வந்த 3 தீவிரவாதிகள் மனித வெடிக்குண்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தி உள்ளனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது.349 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 100 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பெல்ஜியத்திலிருந்து வந்த தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளார்.ஒருவர் ஃபாரீஸ் நாட்டில் தலைமறைவாகி உள்ளார் என்கிற நிலையில் அவரைத் தேடும்பனிகள் தீவிரமடைந்துள்ளன. தலைமறைவாக இருப்பவர் கொடூரமானத் தீவிரவாதி என்றும் சொல்லப்படுகிறது. எனவே, ஃ பாரீஸ் நாட்டில் இன்னமும் அச்சம் விலகாத நிலையில் மீண்டும் ஒருத் தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்றும் ஒரு சந்தேகத் தகவல் உலா வருகிறது.

0 Responses to ஃபாரீஸ் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com