Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முப்பது மணி நேரத்துக்கும் மேலாக சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால் நகர் முழுக்கத் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.

வங்கக் கடலில் இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் சென்னையில் கடந்த 30 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ரயில் பாதைகள், சாலைகள், திரை அரங்குகள், வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, பலரும் உணவுக்கும் குடித் தண்ணீருக்கும் அல்லல் படும் நிலை உருவாகி உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் உணவு போதவில்லை என்பதால், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட மக்கள் உணவு தயாரித்து மக்களுக்கு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். சாலையில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் தண்ணீர் புகுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால், அவைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் வங்கிப் பணிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

0 Responses to முப்பது மணி நேரத்துக்கும் மேலாக சென்னையில் தொடர் மழை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com