Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொடர் மழையால் சென்னையில் காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்துக் குறைந்துள்ளது. இதையடுத்து சென்னையில் காய்கறிகளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி கிலோ ஒன்றின் விலை இப்போது 60 ரூபாயாக விற்கப்படுகிறது. இதே போன்று கிளோ 35 ரூபாய் என்று விற்கப்பட்ட பீன்ஸ். விலை தற்போது 45 ரூபாய் என்று விற்கப்படுகிறது. இதே போன்று அவரை, கேரட்,பீட்ரூட் விலையும் உயர்ந்துள்ளது. முட்டைக் கோஸ் விலை மட்டும் கிலோ 15 ரூபாய் என்று அதே விலை தொடர்கிறது.

மழையைக் காரணம் காண்பித்து மற்ற பகுதிகளில் காய்கறிகள் விற்கும் சிறு வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் விலையை விட இஷ்டம்போல கூடுதலாக விலை வைத்து விற்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காரணம் கேட்டால் போக்குவரத்துக் குறைவு, காய்கறிகள் வரத்துக் குறைவு என்றும் வியாபாரிகள் கூறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்..

0 Responses to சென்னையில் காய் கறிகளின் விலை கடும் உயர்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com