கிணற்றில் போட்ட கல்லாக தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளது. மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்பது தமிழ்ப் பழமொழி.
அது தமிழ்ப் பழமொழிதானே சிங்களத்தில் அதற்கு மறுப்பது என்று அர்த்தம் என்று உணர்த்துகிறார் ஜனாதிபதி.
சிராணி பண்டாரநாயக்கா, சரத் பொன்சேகா விடயத்தில் அவர் காட்டிய அக்கறையை அவர்கள் சிங்களவர்கள் என்பதால் தான் என்றே கொள்ள வேண்டியுள்ளது.
ஆளாளுக் தமக்குத் தெரிந்த மாதிரி கையாள முற்படுகிறார்கள். டக்ளஸ் தேவானந்தாவும் அவர்களில் ஒருவர்.
பல வருடங்களாக ஆளும் தரப்பில் அமைச்சராக இருந்து இண(ந)க்க அரசியலே இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரும் என்றும் கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழர் தவறவிட்டனரே எனவும் புலம்பிக் கொண்டு திரிந்த போது தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் அவரது கண்களுக்கு தெரியவில்லை.
ஏன் அவரது கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் கைதாகி சிறைத் தண்டனை பெற்ற போதும் அலட்டிக் கொள்ளவில்லை.
யாழ் மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் (கைதி இலக்கம் 1425) கைதாகிய போதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
தற்போது மகசீன் சிறைக்கு வந்து இப்போது கோமகனைச் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரது அழைப்பை கோமகன் நிராகரித்தார். இவ்வளவு காலமும் ஸ்ரீதர் தியேட்டருக்கும்; கொழும்புக்குமாக கோமகனின் தாயார் திரிந்தார்.
யாழ். மாநகர சபையில் கோமகன் உட்பட அரசியல் கைதிகள் அனைவரும் விடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோமகன் ஆற்றிய கல்விப் பணியால் பயனடைந்த மாணவர்கள் யாழ்.மாநகரசபையிலிருந்து ஊர்வலமாகச் சென்று ஸ்ரீதர் தியேட்டரில் மகஜர் கொடுத்தனர்.
அப்போதெல்லாம் அதிகாரத் திமிர் அவரது கண்ணை மறைத்து விட்டது.
இதைவிட மோசமான செயல் ஒன்றையும் டக்ளஸ் செய்தார். அது மன்னிக்கவோ மறக்கவோ முடியாதது. மகிந்த இரண்டாவது தடவை பதவியேற்றதும் பாராளுமன்றத் தேர்தலை நடத்தினார்.
இந்தத் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளுக்காக தனது கட்சி உறுப்பினர்களைக் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைத்திருந்தார் டக்ளஸ். அதில் அவர் உரையாற்றிய போது ‘இங்கிருப்பவர்களில் ஒருவரை விசாரணைக்காகக் கையளிக்க வேண்டும் என ரி.ஐ.டி.யினர் என்னிடம் கோரியிருந்தனர்.
நான் தான் மறுத்து விட்டேன் எனக் கூறினார். அதாவது தனது கட்சி உறுப்பினர் கைதாகப் போகிறார் என்பதும், அவர் யார் என்பதும் என்ன தான் அமைச்சுப் பொறுப்பை வகித்தாலும் அவரைத் தன்னால் காப்பாற்ற முடியாது என்பதும் மிக நன்றாகவே அவருக்குத் தெரியும்.
கைதாகப் போகும் ஒருவரிடமிருந்து அவரது செல்வாக்கை தனது தேர்தல் வெற்றிக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்றுதான் டக்ளஸ் சிந்தித்தாரேயொழிய அவரைப் பாதுகாப்பாகத் தப்ப வைக்க முயற்சிக்கவில்லை.
இவ்வாறான விடயமொன்றும் அவருக்குப் புதியதல்ல. தீவுப் பகுதியில் பரப்புரைக்காகச் சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரைத் தாக்கிப் படுகொலை செய்த நெப்போலியனை பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தவருக்கு கோமகனை நாட்டைவிட்டு தப்பவைக்க முடியாதா?
கடைசி இரத்தம் வரை உறிஞ்சிக்குடிக்கும் பிராணி போல நடந்து கொண்டார் அவர். அடுத்தவர் சித்தார்த்தன், புளொட் இயக்கத்தினரால் கைது செய்யப்பட்டு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் ஒருவர் அனுராதபுரம் சிறையில் இருந்தார்.
இன்று சித்தார்த்தன் அரசியல் கைதிகளுக்காக சிறைச்சாலைக்குச் செல்கின்றார். அவரிடம் ‘சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, செல்வம் அடைக்கலநாதனின் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவி என்பவற்றை ஈடுவைத்தேனும் எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்’ என்று கைதிகள் வேண்டினர்.
மற்றவர் அமைச்சர் சுவாமிநாதன். இவர் சேர் பொன் இராமநாதனின் பூட்டன் என்ற வகையில் பிரபுத்துவப்பாணி அவரிடமிருக்கும். உண்ணாவிரதத்தை விடவேண்டும் என்பதை உத்தரவுப் பாணியிலேயே சொன்னார். தான் சிறைச்சாலை அமைச்சுப் பொறுப்பை ஏற்கவிருப்பதாகவும் கூறினார்.
கைதிகளோ தமது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. இவங்களோட கதைக்க முடியாது என முடிவெடுத்துப் பின்வாங்கினார்.
ஜே.வி.பி.யின் விஜிதகேரத் எல்லோரையும் ஓரேயடியாக விடுதலை செய்ய வேண்டுமென எதிர்பார்க்க முடியாது என அரசியல் கைதிகளுக்குப் போதனை செய்கிறார்.
சந்திரிகாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் போது நசுக்கிடாமல் தங்களது உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்வித்தவர்கள் இப்போது நடைமுறைச் சாத்தியம் பற்றி விளக்கமளிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் 32 பேரை கடுமையான நிபந்தனையுடன் பிணையில் விடுவித்தது சம்பந்தப் பெருமானின் மகாசாணக்கியம் என்று கட்டுரை எழுதுகிறார்கள்.
அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு என்னும் கோரிக்கை மலினப்படுத்தப்படுகிறது. கூட்டமைப்பினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் திரும்பிப் படிப்பது நல்லது.
இதுவரை காலமும் ‘வேறு ஒருவரிடமும் தொடர்பு வைக்காதீர்கள். நானே உங்கள் மீட்பன்’ என்று நாடகமாடிய சுமந்திரன் இப்பொழுது நாடு நாடாகத் திரிந்து வடக்கு முதல்வர் மீது நடவடிக்கை எடுத்தால் தமிழினத்திற்கு விடிவு கிடைத்துவிடும் என்ற பாணியில் உரையாற்றுகின்றார்-பேட்டி கொடுக்கிறார்.
சம்பந்தன் ஐயாவோ மருத்துவம் காரணமாக இந்தியாவுக்குப் பயணமாகிவிட்டார்.
டக்கிளசோ, சம்பந்தனோ, சித்தார்த்தனோ தாங்கள் தமிழர் என்பதைச் சில சமயங்களில் மறக்கலாம். ஆனால் ஜனாதிபதி உட்பட சிங்களவர் எவரும் அதை மறக்கவில்லை.
இந்த வட்டங்களை எல்லாம் விட்டு தமிழர்கள் சுயமாக சாத்தியமான அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுவதே இப்போதைய தேவை. அது ஒன்றுதான் இப்போது எஞ்சியிருப்பது. அதற்குள்ளும் யாரும் தலையை ஓட்டி கொச்சைப்படுத்த முயலாமல் இருங்கள் என வேண்டிக் கொள்வோம்.
பகலவன்
sinnaththambypa@gmail.com

0 Responses to கறிவேப்பிலை ஆகிவிட்ட அரசியல்கைதிகள் விவகாரம் - பகலவன்