பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று இரவு இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை ஒழுங்குசெய்து நடத்தியது இஸ்லாமிய தேசம் (Islamic State) ஆயுதக் குழுதான் என பிரான்ஸ் பிரதமர் பிரன்ஸுவாஸ் ஹாலந்து அறிவித்துள்ளார்.
8 துப்பாக்கிதாரிகள் மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பிரான்ஸுக்கு வெளியிலிருந்து இதற்கான திட்டமிடல் மற்றும் வழிநடத்தல் ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாரிஸின் சில மதுபான நிலையங்கள், சில உணவு விடுதிகள், இசைக்கச்சேரி நிகழ்வு இடம் ஒன்று மற்றும் ஜேர்மனி - பிரான்ஸ் அணிகளுக்கு இடையில் நட்புரீதியிலான காற்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பாரீஸ் தேசிய காற்பந்து மைதானம் என்பவற்றைக் குறிவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு என பல்வேறு வழிகளில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறைந்தது 130 பொதுமக்கள் வரை பலியானதுடன், 180 பேர் காயமடைந்தனர். அவர்களில் 80 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் இஸ்லாமிய தேசம் அமைப்பினருக்கு எதிராக யுத்தத்தை மேற்கொள்ள பிரான்ஸும் கைகோர்த்ததை கண்டித்தே இத்தாக்குதலை இஸ்லாமிய தேசம் ஆயுதக் குழுவினர் மேற்கொண்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பாரிஸில் நடைபெற்ற இத்தீவிரவாத தாக்குதல் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைப் போன்று உலகளவில், கடும் அதிருப்தியையும், கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி ஒபேரா தேசிய மையம், நியூயோர்க்கின் டைம்ஸ் கொயர், கனடாவின் டொரொண்டோ டவர், ஆக்லாந்து ஸ்கை டவர் என பல்வேறு நாடுகளின் புகழ்வாய்ந்த கட்டிடங்கள் நேற்றிரவு பிரான்ஸின் தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிர்ந்து பாரிஸுடனான தமது ஒற்றுமையை வெளிக்காட்டின.
இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு பிறகு பிரான்ஸில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்படுவது தற்போது நான்காவது முறையாகும். இறுதியாக 2005ம் ஆண்டில் இனவாதக் கலவரங்களின் போது இவ்வாறு அவசரகால நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
2004ம் ஆண்டு ஸ்பெயினின் மேட்ரிட் குண்டுத் தாக்குதலுக்கு பிறகு ஐரோப்பிய நாடொன்றில் இடம்பெற்ற மிகக் கொடூரமான வன்முறைத் தாக்குதலாக நேற்றைய பாரீஸ் தீவிரவாத தாக்குதல் இணங்காணப்பட்டுள்ளது.
நேற்று பிரான்ஸ் - ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான காற்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்திற்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதை தொடர்ந்து பாரிய சத்தம் அரங்கமெங்கும் அதிர்வை ஏற்படுத்தியதை பல்வேறு கமெராக்கள் வீடியோக் காட்சிகளாக படம்பிடித்து வெளியிட்டுள்ளன. உடனடியாக மைதானத்திலிருந்து இரு நாட்டு ரசிகர்களும் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்கள் தங்களது நாட்டு தேசிய கீதங்களை இசைத்தபடி மிகுந்த அச்சத்துடன் வெளியேறிய காட்சிகளும் வெளியாகின.
இன்னொரு பக்கம், ஹார்ட் ராக் இசை நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் துப்பாக்கிதாரிகள் புகுந்து சுடத் தொடங்கிய போது, உடனடியாக எவராலும் அது நிஜமான தாக்குதலா என்பதை ஊகிக்க முடியவில்லை எனவும் துப்பாக்கிதாரிகள் பணயக் கைதிகளாக பிடித்த பொதுமக்களை ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லத் தொடங்கிய போதே அக்கொடூரம் புரியத் தொடங்கியதாக அச்சம்பவத்தில் சிக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு தீவிரவாதிகள் அத்தாக்குதலை நடத்தத் தொடங்கிய போது "இது உங்களது நாட்டு அதிபர் ஹாலந்தின் தவறு. அவர் சிரியா விடயத்தில் தலையிட்டிருக்கக் கூடாது" என உரக்கக் கூறியே தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு இத்தாக்குதலை நடத்திய நான்கு துப்பாகி தாரிகளும் பின்னர் கொல்லப்பட்டனர். மூவர் தங்களது உடலில் பொருத்தியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தும், நான்காவது நபர் அதிரடிக் காவல்துறையினரால் சுடப்பட்டும் உயிரிழந்தனர். தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய ஒருவரின் ஆடைகளிலிருந்து சிரிய நாட்டுக் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பிரான்ஸ் தாக்குதல் : IS ஆயுதக் குழுவினரே சூத்திரதாரிகள் என பிரான்ஸ் அதிபர் குற்றச்சாட்டு!