Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவுஸ்திரேலியாவில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு அமைய மூன்று பிள்ளைகளின் தாயாரான ரஞ்சனி கடந்த மூன்று ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளரான குறித்த பெண் என்ன காரணத்திற்காக அவுஸ்திரேலியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வார் பாதுகாப்பு தரப்பினர் கருதினார்கள் என்பதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. அதேபோன்று, என்ன காரணத்திற்காக அவர் விடுதலை செய்யப்படுகின்றார் என்பது பற்றியும் அறிவிக்கப்படவில்லை.

ரஞ்சினியின் கணவர் அவுஸ்திரேலியப் பிரஜை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஆஸியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் பெண் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com