Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 140க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

பாரிஸின் கிழக்குப் பகுதியிலுள்ள பட்டாக்கிளன் என்ற மாநாட்டு மண்டபத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 100 பேரளவில் உயிரிழந்துள்ளதாகவும், மத்திய பாரீஸ் நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மற்றொரு தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 10க்கும் அதிகமானனோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸ்-ஜெர்மனி இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வடக்கு பாரீஸ் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலியானதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீவிரவாதிகளின் தாக்குதல்களையடுத்து அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்திய பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலாண்டே, நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ளார். அத்தோடு, நாட்டின் எல்லைகளையும் மூடியுள்ளார்.

0 Responses to பாரிஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல்; 140க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com