Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை கடற்படைக்கு அவன்கார்ட் நிறுவனம் செலுத்த வேண்டிய 600 மில்லியன் ரூபாவினை செலுத்துமாறு கோரி அந்நிறுவனத்துக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவனம், 600 மில்லியன் ரூபாவை கடற்படைக்கு செலுத்த வேண்டியுள்ளதாகவும், இது குறித்து அந்நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கடற்படை ஊடக பேச்சாளர் அலவி அக்ரம் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதம் தொடர்பில் அவன்கார்ட் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், இலங்கை கடற்படையால் கடந்த 2015 நவம்பர் 01ஆம் திகதி தொடக்கம் 2015 நவம்பர் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்ட சேவைக்காக 22 மில்லியன் ரூபாவையும், 2014 டிசம்பர் தொடக்கம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்ட சேவைக்காக 556 மில்லியன் ரூபாவையும் கடற்படையின் நலன்புரி நிதியத்திற்கு செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தங்களது நிறுவனம் அவ்வாறான எந்தவிதமான கடனையும் கொண்டிருக்கவில்லை என்றும், ஒன்றிணைந்த அரச நிதியம் மற்றும் கடற்படை நலன்புரி நிதியம் ஆகிய இரண்டிற்கும் இந்த சேவைக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டதாகவும் அவன்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் கமல் கமகே குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கடற்படைக்கு செலுத்த வேண்டிய 600 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு அவன்கார்ட்டுக்கு கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com