Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அமர்வுகளின் ஒருபகுதி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்ஸ்வெல் பரணகம மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணை அறிக்கையானது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்படும். அந்த அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்தால் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

விசேட நீதிமன்றம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது அரசியல் சார்ந்த விடயமாகும். ஆகையால், அதனை என்னால் கூற முடியாது. அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்று, நீதிமன்றம் உருவாக்க சிறிது காலதாமதம் ஏற்படலாம். விசாரணைகள் சர்வதேச பொறிமுறையூடாக முன்னெடுக்கப்படுகின்றன. விசாரணையில் குற்றவாளிகள் இனங்காணப்படுவார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசேட நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்: மக்ஸ்வெல் பரணகம

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com