Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாட்டின் எந்தவொரு பாதுகாப்பு முகாமிலும் இரகசிய தடுப்பு முகாம்கள் இல்லை. புதிய இரகசிய முகாம்கள் தொடர்பில் எவராவது தகவல்களை வழங்கினால் அது குறித்து அரசாங்கம் பூரண விசாரணையை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கம் போதே, அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த காணாமற்போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு முன்வைத்திருக்கும் அறிக்கை குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டின் எந்தவொரு பாதுகாப்புப் படை முகாம்களிலும் இரகசிய முகாம்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் செயற்குழு திருகோணமலை கடற்படை முகாமுக்கு விஜயம் செய்து அங்கு முன்னெடுக்கப்பட்டிருந்த இரகசிய தடுப்பு முகாமை பார்வையிட்டிருந்தது. இலங்கைக்கு வந்திருந்த அவர்களை நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இரகசியப் பொலிஸாருடன் ஐக்கிய நாடுகள் செயற்குழுவினர் திருகோணமலை கடற்படை முகாமுக்குச் சென்றிருந்தனர். இந்த முகாமை இரகசியப் பொலிஸார் ஏற்கனவே சீல் வைத்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இலங்கையில் எந்தவொரு நபரையும் எவராலும் சட்ட ரீதியான முறையில் தடுத்து வைக்க முடியாது. இவ்வாறு தடுத்து வைக்கப்படுவதை அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்திடமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை: மங்கள சமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com