Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலங்களில் வடக்கில் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு, செம்மன்தீவு கிணறுகளிலும், மண்டைதீவு தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது. இவற்றை அகழ்வுக்கு உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். அத்தோடு, இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவையும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றிய போதே சிவஞானம் சிறீதரன் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி முதல் செப்ரெம்பர் 25 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 150 வரையான இளைஞர்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 70 பேர் வரையிலானோர் காணாமற்போகச் செய்யப்பட்டனர்.

இந்த விடயம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைத்தீவு, செம்மன்தீவுகளின் கிணறுகளிலும், மண்டைத்தீவு கிறிஸ்தவ தேவாலய வளாகத்திலும் புதைக்கப்பட்டன. இந்த இடங்களை இராணுவம் கொங்கிறீட்டால் மூடி மறைத்துள்ளது. இச்செயல் இங்கு உடலங்கள் புதைக்கப்பட்டமையை உறுதி செய்கின்றது. இது தொடர்பில் அப்போதைய இராணுவ அதிகாரி கொப்பேகடுவ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு கிணறுகளில் புதைப்பு: சிவஞானம் சிறீதரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com