Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை- அமெரிக்காவுக்கிடையிலான இரு தரப்பு இராஜதந்திர பேச்சுவார்த்தை அடுத்த வருடம் பெப்ரவரியில் வொஷிங்டனில் நடைபெறவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலைப் பதவிகளில் ஒன்றான அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்கவுள்ள தோமஸ் ஷனோன், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை இலங்கை வந்தார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், தோமஸ் ஷனோனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகலில் இடம்பெற்றது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தோமஸ் ஷனோன் கூறியுள்ளதாவது, "இலங்கை சுபீட்சத்துடன் சந்தர்ப்பங்களுடன் முன்னோக்கிச் செல்கின்ற நேரத்திலேயே நான் எனது முதலாவது விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டுள்ளேன்.

இலங்கையில் நீண்ட கால சமாதானத்துக்கும் சுபீட்சத்துக்கும் இட்டுச் செல்வதற்கான பாதையை நாட்டின் தலைவர்களும், மக்களும் இணைந்து செயலாற்றி வருகின்றமையை வரவேற்கின்றோம்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நான் ஆக்கபூர்வமான பேச்சுகளில் ஈடுபட்டேன். அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி குறிப்பிட்டது போன்று இலங்கையுடன் அமெரிக்கா இணைந்து நிற்பதற்குத் தேவையான வழிவகைகளையும் ஆராய்ந்தோம். எமது கைகோர்ப்பை மேலும் மேம்படுத்துவதற்காக உறுதிமிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.

இலங்கை அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியாகக் காணப்படும் பரிமாற்றங்களை வலுப்படுத்துவது, எமக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது, ஒத்துழைப்புக்களை தீவிரப்படுத்துவது தொடர்பாக இரு அரசுகளுக்கும் இடையில் கூட்டுப் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த மே மாதம் அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் அறிவித்திருந்தார்.

அதற்கமைய, இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது கூட்டுப் பேச்சு எதிர்வரும் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என்பதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கை- அமெரிக்கா இடையிலான இருதரப்பு பேச்சு அடுத்த ஆண்டு: தோமஸ் ஷனோன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com