Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாணையை முன்னெடுப்பதற்கு பதிலாக உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் குற்றம் தொடர்பிலான விசாரணைக்கு உள்ளநாட்டிலேயே நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களை ஈடுபடுத்த உள்ளதாகவும் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து பேசும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்புகளை சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளின் அபிவிருத்திக்கு தேவையான நிதி, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

எனவே, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் சில கேள்விகள் வினாவப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கட்டங்களாக விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

குற்றங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றங்கள் இழைத்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சிறு குற்றங்களை இழைத்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிbழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டு பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் காணப்படுவார்களாயின் அவர்கள் தொடர்பில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம்: சந்திரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com