Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என்றும், மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட 15 பேரின் தண்டனையை குறைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று புதன்கிழமை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கைத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சபேர், யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. மத்திய அரசு சார்பில் வழக்குரைஞர் ரஞ்சித் குமார், குற்றவாளிகளில் ஒருவரான முருகன் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, தமிழ அரசு சார்பில் ராகேஷ் திரிவேதி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

11 நாள்கள் நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களுக்குப் பிறகு, கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுக்கு கிடையாது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சார்பில் எச்.எல்.தத்து தீர்ப்பளித்துள்ளார்.

0 Responses to ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com