Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரஷ்ய போர் விமானத்தினைச் சுட்டு வீழ்த்தி தவறிழைத்துள்ள துருக்கிக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வியாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளதாவது, “பயங்கரவாதிகளுடன் துருக்கிக்கு உள்ள தொடர்பை யாரும் மறந்துவிடவில்லை. சிரியாவில் பயங்கரவாதிகள் திருடி விற்கும் எண்ணெய் மூலம் தங்களது சட்டைப் பைக்குள் பணத்தை நிரப்பிக் கொள்பவர்கள் யார் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

கூலிப் படையை உருவாக்கவும் ஆயுதம் வாங்கவும், ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இரக்கமற்ற பயங்கரவாதச் செயல்களை நடத்தத் திட்டமிடவும், அந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது.

ஒருவரது செயல்களிலேயே மிகவும் கீழ்த்தரமானது, துரோகம் புரிவதுதான். ரஷ்ய போர் விமானத்தின் விமானியைச் சுட்டு வீழ்த்தியவர்கள் அதை உணருவார்கள். நமது போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது மாபெரும் தவறு என்று துருக்கி உணரும்படி செய்வோம்.” என்றுள்ளார்.

0 Responses to துருக்கிக்கு தக்க பாடம் புகட்டுவோம்: விளாடிமிர் புட்டின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com