Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை விமான நிலையம் பழையபடி இயங்குவதற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

சென்னையில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதனால், அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளம் தற்காலிக விமான நிலையமாக செயல்பட்டது.

இதனிடையே, சென்னையில் மழையின் அளவு குறைந்ததாலும், ஏரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் வெள்ள நீர் வடியத் தொடங்கியது.

இதனால், விமான நிலையத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. விமான ஓடுபாதையில் தண்ணிர் வடியத்தொடங்கியது. இதனால், விரைவில் விமான சேவை துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், விமான நிலையத்தில் சேவை இன்று சனிக்கிழமை துவங்காது என்று மத்திய இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் தண்ணீர் வடியத்தொடங்கினாலும், தற்போது உள்ள சூழலில் விமான நிலையத்தில் இருந்து சேவையை துவங்க முடியாது. மின் விநியோகம் சீரான பிறகுதான் விமான சேவை தொடங்கும். இதனால், விமான சேவை தொடங்க இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்.

0 Responses to சென்னை விமான நிலையம் இயக்க இன்னும் இரண்டு நாட்களாகும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com