Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் வரணியில் இராணுவ சித்திரவரை முகாம் இயங்கியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதனை தான் பார்வையிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மூன்று படங்களை இணைத்துள்ள சுரேஷ் பிரேச்சந்திரன், வரணி சித்திரவதை முகாம் தொடர்பில் எழுதியுள்ளார்.

அதில், “கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் நடுபகுதி வரையில் இராணுவத்தினரின் 526ஆவது படையணி நிலை கொண்டு இருந்த வரணி இராணுவ படை முகாம் தற்போது கண்டி வீதியில் ஆசைப்பிள்ளை ஏற்றத்திற்கு அருகமையில் மாற்றப்பட்டு உள்ளது.

குறித்த பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய பின்னர், அப்பகுதியில் உள்ள வீடுகள் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிட்ட போது அங்குள்ள இராணுவ முகாமில் சித்திரவதை முகாம் இருந்தமைக்கு சான்றாக அங்கிருந்த முகாம் காணப்பட்டது.

விசாரணைக்கு என அழைக்கப்பட்டவர்கள் இந்த முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் வகையில் அந்த முகாம் காணப்பட்டது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to யாழ்.வரணியில் இராணுவ சித்திரவதை முகாம்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com