தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெறும் வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதாக தெரிவிக்கப்பட்டபோதும், அதனை நிறைவேற்றுவதில் கடந்த காலங்களில் தொடர்ந்தும் இழுபறி நீடித்தது. தற்போது அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், குறித்த சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!