Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதிக்குரிய ஓய்வூதியம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பளம் ஆகிய இரட்டைச் சம்பளத்தை அரசிடமிருந்து பெற்று வருகின்றார் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் இதனைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் படி மாதாந்தம் 4 இலட்சத்து 54,000 ரூபாவை வருவாயாக பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வூதியமாக மாதாந்தம் 3 இலட்சத்து 49 ஆயிரமும், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமாக ஒரு இலட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் பெற்று வருவதாகவும் சம்பளப்பட்டியலை பாராளுமன்றத்தில் காண்பித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அரசாங்க ஊழியர் ஒருவர் இவ்வாறு செய்திருந்தால் அவரின் நிலைமை என்னவாகியிருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.

வரவு- செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஒன்பதாம் நாள் விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, “வரவு- செலவுத் திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்திற்கு வந்து உரையாற்றாத முன்னாள் ஜனாதிபதி, விகாரைகளுக்குச் சென்று அதனை விமர்சித்து வருகின்றார். முடிந்தால் இங்கு வந்து விவாதிக்குமாறு அழைப்பு விடுகின்றேன்.

நாட்டின் கடன் சுமை அதிகரித்திருப்பதாக விகாரைகளுக்குச் சென்று மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அவரின் ஆட்சியிலே கடன் சுமார் 5 மடங்காக உயர்ந்தது. முடிந்தால் இந்தக் குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்தில் வந்து கூறட்டும். இங்கு 182 பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிய போதும் அவர் பேச வரவில்லை. ஓய்வூதியம் பெறும் அரச ஊழியர்கள் சம்பளம் பெறுவதில்லை. ஆனால் இவர் ஜனாதிபதிக்குரிய ஓய்வூதியம், சம்பளம் இரண்டையும் ஒன்றாக பெற்றுவருகிறார்.” என்றுள்ளார்.

0 Responses to இரட்டைச் சம்பளத்துடன் மஹிந்தவின் மாத வருமானம் 4,54,000 ரூபாய்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com