சவுதி அரேபியாவில் கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இலங்கைப் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்டுள்ள் பணிப்பெண்ணுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கும், அதற்கான சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கும், அதுகுறித்து கண்காணிப்பதற்குமான சகல உதவிகளையும் பெற்றுக்கொப்பதற்கான முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட பணிப்பெண்ணுக்கு நேற்று சனிக்கிழமை கல்லெறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்ததாக தகவல்கள் பரவின. எனினும், இதனை தாம் நிராகரிப்பதாகவும், உண்மைக்குப் புறம்பான தகவல்களே தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மருதானையை வதிவிடமாகக்கொண்ட பணிப்பெண்ணுக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த ஆணுக்கும் 100 கசையடிகளை சவுதி அரேபிய நீதிமன்றம் தண்டனையாக விதித்துள்ளது.

0 Responses to சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இலங்கைப் பெண்ணை மீட்பது தொடர்பில் பேச்சு!