இலங்கையில் கடந்த கால ஆட்சியாளர்களின் மோசடிகளினால் புதிதாக பிறக்கும் குழந்தையொன்றின் தலையில் சுமார் 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடன் சுமை ஏற்றப்படுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கெரடாவுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டுக்கு 9500 பில்லியன் ரூபா கடன்சுமை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 10500 பில்லியன் ரூபாக்களாக அதிகரிக்கலாம் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.
கடந்த அரசாங்கம் கூடுதலான கடன்களைப் பெற்றுவிட்டது. பல கடன்கள் தற்பொழுதே தெரியவருகிறது என அரசாங்கம் கூறித் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தக் கடன்களை எவ்வாறு செலுத்துவது என்று அரசு தீர்மானிக்க வேண்டும். அதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.
கடன் சுமையில் 40 வீதத்தை நாட்டு மக்கள் செலுத்த முடியாது. ஏனெனில், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெற்ற கடன்களுக்கான 'கொமிஷன்', மோசடி, திருட்டு, இலஞ்சம் என 40 வீதம் பெறப்பட்டுள்ளது. அதாவது சுமார் 4000 பில்லியன் ரூபா இவ்வாறு மோசடியாகப் பெறப்பட்ட பணம்.
இந்தப் பணத்தை நாட்டு மக்களிடமிருந்து அறவிடமுடியாது. கடந்த அரசாங்கத்தில் இருந்தவர்களிடமிருந்தே இப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையில் பிறக்கும் குழந்தையொன்றின் தலையில் 5 இலட்சம் கடன் சுமை: அநுரகுமார