Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியாவில் இராணுவத்தினருக்கான குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து வடக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவத்தின் 56வது படைப்பிரின் ஒத்துழைப்புடன் வவுனியா கொக்எலிய பிரதேசத்தில் இராணுவ வீரர்களுக்கென 40 பேர்ச்சர்ஸ் வீதம் 80 காணித் துண்டுகளில் ‘நல்லிணக்க படைவீரர் கிராமம்’ என்கிற பெயரில் இராணுவக் குடியிருபொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

ஆரம்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு போராட்டம் தொடர்பில் முறையாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்த போதிலும், இறுதியில் போராட்டத்தின் நோக்கம் சரியாக இருக்கின்ற நிலையில் அதில் தம்மையும் இணைத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.

0 Responses to வவுனியாவில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து வடக்கு மாகாண சபையில் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com